திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின 15 குடும்பங்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனர் இதனை அறிந்த அப்பகுதியில் இயங்கி வரும் கிருபையின் ஜெப வீடு திருச்சபையின் போதகர் ராம்டேனியல் இது குறித்து இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தில் தெரிவித்ததின் அடிப்படையில் விரைந்து வந்த வாலிபர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் குருசாலமோன் தலைமையில் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை பார்வையிட்டு 15 குடும்பத்தாரையும் அழைத்துவந்து கல்வி பயலும் பிள்ளைகளுக்கு புத்தகப் பை, காலணிகள், தரை விரிப்பான், உள்ளிட்ட உபகரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி,மளிகை சாமான், காய்கறி, பால், பிஸ்கட், உணவு,போன்ற பொருட்களையும் வழங்கினர். இதில் தாமஸ்,மோகன் , அர்ச்சுனன், ராஜேஷ், தாவிது, பரிமளம், ஏழுமலை, பூபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments