சிறுவாபுரியில் கொட்டும் மழையில் 6-வது நாள் சூரசம்கார நிகழ்ச்சி..... திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் பங்கேற்பு......


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இத்திருக்கோவிலில் மகா கந்த சஷ்டியின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.இதை முன்னிட்டு சனிக்கிழமை ஸ்ரீசண்முகர் சத்ருசம்ஹாரதிரிசதி புஷ்பார்ச்சனை நடைபெற்றது.

நேற்று வேல் வாங்கும் விழாவும், 9-ம் கால யாகசாலை பூஜைகளும்,சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெற்றது.இன்று காலை கலச பூஜை,பூர்ணாகுதி,கலச அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது.மாலை கொட்டும் மழையில் சூரசம்கார நிகழ்ச்சியும்,சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இவருக்கு திருக்கோவிலின் சார்பாக ஆனந்தன் குருக்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும்,சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெற்றது.நாளை காலை அபிஷேகமும்,சந்தன காப்பும் நடைபெறுகிறது.மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும்,இரவு 8 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை திருக்கோவிலின் செயல் அலுவலர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறநிலைக்குழு லட்சுமி நாராயணன். ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் குமார். ரமேஷ். பா.து. தமிழரசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். ராஜசேகர். ஹரிமுதலியார்.எம் எஸ் எஸ் சரவணன் பகலவன். சுதாகர் மனோஜ் நடராஜ் முன்னாள் திமுக கவுன்சிலர் சந்திரசேகர். பிரபு..ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments