• Breaking News

    மயிலாடுதுறை: வைகாசி திருவிழாவை முன்னிட்டு பண்ணீர் வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் 18 - ம் ஆண்டு கரகம்,காவடி,பால் குட திருவிழா நடைபெற்றது


     மயிலாடுதுறையை அடுத்துள்ளது பண்ணீர வேலி. இக்கிராமத்தில் மிக பழமையான கிராம தெய்வமான மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு. கரகம், காவடிகள் பழவாற்றங்கறையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. 

    பின் மகா மாரியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்று . சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த பால்குடம், கரகம், அலகு காவடிகளை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் எடுத்து வந்து அம்பாளின் அருளை பெற்றனர் இதை எடுத்து இரவு கரகம் மற்றும் கருப்பண்ணசாமி வேடமடைந்து,பச்சைக்காளி பவள காளி வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று கோயிலில் சென்றடைந்தது.

    No comments