கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 194 பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சார் ஆட்சியர் ரவிக்குமார் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களுக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழு நாட்கள் ஜமாபந்தி சார் ஆட்சியும் ஜமாபந்தி அலுவலருமான ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஜனாவதி நிறைவு நாள் நிகழ்வில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜமாபந்தி அலுவலரும், சார் ஆட்சியருமான ரவிக்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 511 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 194 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், எஞ்சிய 317 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து 194 பயனாளிகளுக்கு 71 வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பூவலம்பேடு ஊராட்சி முன்னாள் தலைவரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் வெங்கடாஜலபதி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். விழா முடிவில் தனி வட்டாட்சியர் புகழேந்தி நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment