திருவள்ளூர்: கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் து.குணா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, May 31, 2025

திருவள்ளூர்: கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் து.குணா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் து.குணா கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்று பணி நிறைவு பாராட்டு விழா இன்று கும்மிடிப்பூண்டி சிவம் ஜி ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.


 உடன் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் மாரிமுத்து சந்திரசேகர் மோகன் ஆறுமுகம் தனிப்பிரிவு போலீசார்கள் சுரேஷ் ராமதாஸ் உளவுத்துறை போலீஸ் ஜெயபிரகாஷ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கவரப்பேட்டை ஆரம்பாக்கம் மாதர்பாக்கம் ஆரணி ஊத்துக்கோட்டை பொன்னேரி பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள்  சால்வைஅணிவித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment