திருக்குவளை அருகே ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4ஆம் ஆண்டு வைகாசி திருவிழா - MAKKAL NERAM

Breaking

Saturday, May 31, 2025

திருக்குவளை அருகே ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4ஆம் ஆண்டு வைகாசி திருவிழா


நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுக்கா,கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்து  வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன்,ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய 4ஆம் ஆண்டு வைகாசி பெருந்திருவிழா   பந்தக்கால் முகூர்த்தத்துடன் கடந்த மே 28ஆம் தேதி  துவங்கியது.முக்கிய நிகழ்வான தப்பாட்ட கிராமிய கலை நிகழ்ச்சியுடன் அம்மன் வீதியுலா  இரவு தொடங்கி விடிய விடிய வெகு விமர்சையாக  நடைபெற்றது. அன்னபட்சி வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

 தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்தும் அம்மனை வழிபட்டனர். அழிந்து வரும்  தப்பாட்ட கலையை மீட்டெடுக்கும் வகையில் சுவாமி வீதி உலா புறப்பாட்டின் போது அரங்கேற்றப்பட்ட தப்பாட்ட நடன  நிகழ்ச்சியை  பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

 தொடர்ந்து  வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து துவங்கி  முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்தும் அர்ச்சனை செய்தும்  அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் வலிவலம் கே.எம். தேசிகர் பண்ணை  பரம்பரை தர்மகர்த்தா அ. மனஅழகன், கோயில் நிர்வாகியும் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை செயலாளருமான ஆர். பழனியப்பன், திருவிழா பொறுப்பாளர்கள் எஸ். வீரசுந்தரம், ஆசிரியர் கோவில்பத்து டி. ஐயப்பன், கோவில்பத்து என். வேதசுந்தரம், ஆலய அர்ச்சகர் வீ. ராஜசேகர குருக்கள்,கோவில்பத்து கொடியாலத்தூர், வலிவலம் கிராமவாசிகள் மற்றும் மருளாளிகள்  விழா குழுவினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன் 





No comments:

Post a Comment