ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல்..... தூக்கம் இல்லை.... மேடையில் புலம்பிய அன்புமணி ராமதாஸ் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 24, 2025

ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல்..... தூக்கம் இல்லை.... மேடையில் புலம்பிய அன்புமணி ராமதாஸ்

 


தர்மபுரியில் பாமக சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல் தூக்கம் இல்லை எனக்குள் பல கேள்விகளை நானே கேட்டுக் கொண்டேன். தினமும் கேட்டுக் கொண்டேன். அப்படி நான் என்ன தப்பு பண்ணேன். தூங்குவதற்கு முன்னால் இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். ஏன் நான் மாற்றப் பட்டேன் நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

என்னுடைய நோக்கம் என்னுடைய லட்சியம் என்னுடைய கனவு எல்லாமே அய்யாவுடைய லட்சியத்தை நிறைவேற்றுவது தான் என்னுடைய கனவு. இவ்வளவு காலமாக ஐயா என்னென்ன சொன்னாரோ அதையெல்லாம் செய்து முடித்தவன் நான். இனியும் ஐயா என்ன சொல்கிறாரோ அதை நிச்சயமாக ஒரு மகனாக, கட்சியின் தலைவராக நிச்சயமாக அதை செய்து முடிப்பேன். அது என்னுடைய கடமை. நம்முடைய இலக்கு என்ன சமுதாய முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என்று கூறினார்.

No comments:

Post a Comment