வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை - MAKKAL NERAM

Breaking

Sunday, May 25, 2025

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை

 


கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment