ஸ்ரீ ரெங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் ரீல்ஸ் பைத்தியங்கள்..... நடவடிக்கை எடுக்குமா கோவில் நிர்வாகம்.? - MAKKAL NERAM

Breaking

Friday, May 23, 2025

ஸ்ரீ ரெங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் ரீல்ஸ் பைத்தியங்கள்..... நடவடிக்கை எடுக்குமா கோவில் நிர்வாகம்.?


 பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது. 21 கோபுரங்களும், 156 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த பிரமாண்டமான கோவில், உலகின் இரண்டாவது பெரிய கோவில் ஸ்ரீ ரெங்கம் அரங்கநாதர் கோவில் ஆகும். ஆண்டு முழுவதும் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே வைணவ ஆலயம் இது. இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கநாதரை வழிபட்டு செல்கின்றனர்.  

இக்கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையிலும்,பக்தர்களுக்கு இடையூறாகவும் சில இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பைத்தியங்கள் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஒவ்வொரு பக்தர்களும் மன அமைதிக்காகவும்,தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பைத்தியங்கல் ரீல்ஸ் எடுப்பதற்காகவே சென்று கோவிலின் புனிதத்தை கெடுத்து வருகின்றனர்.

 இது போன்று நடைபெறாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை  பலகை வைத்து. ரீல்ஸ் பைத்தியங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment