பழவேற்காடு கடற்கரை பகுதியில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 24, 2025

பழவேற்காடு கடற்கரை பகுதியில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார்


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் இன்று (24.5.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள்,  சென்னை வனவிலங்கு காப்பாளர் திரு ‌ மனிஷ் மீனா.I.F.S. அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பல்வேறு தூய்மை தொடர்பான செயல்பாடுகள் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஆகிய துறைகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான பகுதிகளை தேர்வு செய்து தூய்மை செய்து வருகிறது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையங்கள் ஒரு வாரமும், அரசு அலுவலகங்கள் சார்ந்த தூய்மை பணிகள் ஒரு வாரமும் எடுத்து ஒவ்வொரு பணியாக செய்து வருகிறது. 


அந்த வகையில் இன்று கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளில் நெகிழி கழிவுகளை மற்றும் பிற கழிவுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் பணியாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமில்லாமல் மாவட்டத்தின் சிறப்பு திட்டமான மிஷன் 4 மரைன் லைப்ஃ அதாவது கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை தீட்டி அதற்கான லோகோ (இலட்சினை) வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி இதை ஒரு இயக்கமாகவே நாம் இன்று தொடங்கி இருக்கிறோம் இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவர்கள் விட்டுச் செல்லும் நெகிழி கழிவுகள் இன்னும் பிறக்க கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து வராமல் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக.  இன்று மட்டும் நடைபெறாமல் முழு திட்டமாக தயார் செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து கல்லூரிகள், பள்ளிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரையும் இணைத்து ஒரு இயக்கமாக கொண்டு செல்ல போகிறோம். அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் பொது மக்கள் அனைவரும் தங்களுக்கான நேரத்தில் ஒரு மணி நேரம் இந்த இயக்கத்திற்காக செலவு செய்தால் தூய்மையான திருவள்ளூர் மாவட்டத்தையும், தூய்மையான கடற்கரையை உருவாக்கி அதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்து கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான கடற்கரையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  கடற்கரையாக மாற்ற இந்த இயக்கமாகசெயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


முன்னதாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.பின்னர் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் "மிஷன் 4 மரைன் லைப்ஃ"  என்ற லோகோவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பொன்னேரி சார் ஆட்சியர் .ரவிக்குமார், கும்மிடிப்பூண்டி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் .லிவிங்ஸ்டன், பொன்னேரி வட்டாட்சியர் .சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .ரவி, . குணசேகரன், காவல் உதவி ஆணையர் சங்கர் திருப்பாலைவனம் ஆய்வாளர் காளிராஜ் வன சாரகஅலுவலர் பிரபாகரன் உதவி சாரகர் அலுவலர் நரசிம்மன் கடலோர காவல் படை ஆய்வாளர் சபாபதி. தன்னார்வலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment