• Breaking News

    கோவில் திருவிழாவில் வாக்காளர் அடையாள அட்டை போல் வினோத பேனர் வைத்த பக்தர்கள்

     


    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினா்.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு விதமாக பேனர்களை வைத்து இருந்தனர். அதில் பக்தர்கள் சார்பில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து வினோத பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், நாகம்மாள், கன்னிமார், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த பேனரை விழாவுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    கடந்த ஆண்டு திருவிழாவில் அம்மன் படம் வைத்து ஆதார் அடையாள அட்டை போல பக்தர்கள் பேனர் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments