திருப்பூண்டி அருகே நில மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு வழங்கி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை - MAKKAL NERAM

Breaking

Friday, May 30, 2025

திருப்பூண்டி அருகே நில மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு வழங்கி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை



நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள கீழப்பிடாகை ஊராட்சிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் தங்கராசு என்பவரின் மகன் ஆனந்த்  என்பவருக்கு சொந்தமான பூர்வீக இடம் உள்ளது.அவரது  தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு  இறந்து விட்டதால் அவரது சித்தப்பா அன்பழகன் என்பவர் அவருக்கும் அவரது  குடும்பத்திற்கும் தெரியாமல் தகப்பனார்  தங்கராசு பெயரை அவர்களின் அனுமதியில்லாமல்  நீக்கி விட்டு அவரது  பூர்வீக சொத்தை அபகரித்து நில மோசடி செய்துள்ளதாகவும்  அவரது மகன் ஈஸ்வரன் பெயரில்  திருப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளார்.

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில்  நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தனது பூர்வீக இடத்தை மீட்டு தர வேண்டுமெனவும் நில மோசடியில் ஈடுப்பட்ட  அன்பழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனந்த்  கோரிக்கை மனுவினை  வழங்கினார்.அப்போது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள்  உறுதியளித்தனர்.

நாகை மாவட்ட செய்தியாளர்: ஜீ.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment