• Breaking News

    அடைக்கலப்பட்டணத்தில் ஸ்கேட்டிங் போட்டி..... 10 கி.மீ. தொலைவை 39.33 நிமிடங்களில் கடந்த 10 வயது சிறுவன் உலக சாதனை.....

     


    அடைக்கலப்பட்டணத்தில் 10 கி.மீ. தொலைவை 36.33 நிமிடங்களில் ஸ்கேட்டிங் மூலம் கடந்து 10 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான்.

    கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சி லெட்சுமியூரை சேர்ந்த ராகுல்ஞானதுரை என்பவரின் மகன்  ரகுவசந்த். அடைக்கலபட்டணம் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்  ஸ்கேடிட் சென்டரில் பயிற்சி பெற்று வரும் 10 வயது சிறுவனான இவன் ஸ்கேட்டிங் மூலம் 10 கி.மீ, தொலைவினை 39.33 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளான். இதற்கு முன்பு இதே தொலைவை 45 நிமிட்ங்களில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. இதனை முறியடித்து சாதனை படைத்த ரகு வசந்த்க்கு, குளோபல் ரிக்கார்டு செயலாளர் முருகானந்தம் அதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் வெங்காடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி, அடைக்கல்பட்டணம் எஸ்.எம்.ஏ. பள்ளி முதல்வர் மகேஸ்வரி, சிறுவனின் பெற்றோர் ராகுல்ஞானதுரை, சேர்மசெல்வி, மற்றும் உறவினர்கள் ரமேஷ், கலைச்செல்வி, அஷிதா, அஸ்வின், சேர்மசெல்வன், பயிற்சியாளர் சக்திவேல்; உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments