நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியல்
நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம ஊராட்சி கீழத்தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கையை வைத்து வந்த நிலையில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பல ஆண்டுகளாக செய்யப்படாத தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், வயல்வெளிகளில் உள்ள இரண்டு மின் கம்பங்களை மாற்றி சாலை ஓரங்களில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைநது வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து சிக்கல் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அவர்களிடம் நாகை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் நீலாயதாட்சி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடித்து தருவதாக உத்தரவாதம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments