• Breaking News

    கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

     


     சென்னை தெற்கு மாவட்டம், சோழங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சோழங்கநல்லூர், ஆவின் பால் பண்ணை எதிரில் உள்ள கைலாஷ் கார்டனில், சோழங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக-வின் சோழங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளருமான லயன் ச.அரவிந்த்ரமேஷ் தலைமையில் 18.06.2025 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சிக்கு, 14வது மண்டல குழு தலைவரும் சோழங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயலாளருமான எஸ்.வி.இரவிச்சந்திரன், 15வது மண்டல குழு தலைவரும் சோழங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளருமான வி.இ.மதியழகன் மற்றும் புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

       இந்த நிகழ்வில், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் கழக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான மா.சுப்ரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா பேருரை நிகழ்த்தி, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



        இந்த நிகழ்ச்சியில், பாலவாக்கம் க.சோமு, பாலவாக்கம் த.விசுவநாதன், பாலவாக்கம் மு.மனோகரன், எஸ்.பாஸ்கரன், எம்.கே.ஏழுமலை, ரத்னா லோகேஸ்வரன், ஜெ.இ.பாண்டியன், சோழங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மாமன்ற உறுப்பினர்கள் வ.பாபு, அ.முருகேசன், க.ஏகாம்பரம், ஜெ.கே.மணிகண்டன், தமிழரசி சோமு, ஷெர்லி தாமஸ்ஜெய், சர்மிளாதேவி திவாகர், சமீனா செல்வம், விமலா கருணா மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக வட்டச் செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள்(BLA2) மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments