பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் உயிரிழப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் உயிரிழப்பு

 


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா போல்பள்ளியில் அருகே சிராவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பிந்து. இவர்களின் மகள் ஸ்ரேயா(வயது 18). இவர், 12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க முடிவு செய்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரேயாவுக்கு பிறந்த நாள். இதனால் அவர் காலையில் எழுந்து குளிக்க குளியலறைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பிந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரேயாவை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இதய பிரச்சினை காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment