அற்பர்களே அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே..... திருச்சியில் திருமா வசனம் - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

அற்பர்களே அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே..... திருச்சியில் திருமா வசனம்


 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது, இந்தப் பேரணி தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணியாகும்.

யார் எந்த கூட்டணி என தேர்தல் கணக்குகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை இடங்கள் என்று பேசுகிறார்கள். யார் முதலமைச்சர் என்று பேசுகிறார்கள். அந்த கவலை எல்லாம் நமக்கு கிடையாது. விடுதலை சிறுத்தைகள் திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது…

அற்பர்களே அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே… தமிழ்நாட்டின் அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

இன்றும் அம்பேத்கர் என்று சொன்னால் கோடி மக்கள் குரல் கொடுப்பார்கள். இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் குரல் எழுப்புவார்கள். கோஷம் எழுப்புவார்கள். சினிமாக்காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் மட்டும்தான் கோஷம் வரும். ஆனால் அம்பேத்கருக்கு லட்சம் மடங்கு ஹீரோ, லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர்.

அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்ட என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள் ஒரு வாக்கு சிதறாது. சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி, சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் ஆட்சி. அது தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள் தான் விடுதலை சிறுத்தைகள் என்று கூறினார்.

No comments:

Post a Comment