பொது சுகாதாரத்துறை நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார் அவர்கள் உத்தரவுபடி மற்றும் வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் மரு. பிரித்திவிராஜன் அவர்கள் தலைமையில் நாகப்பட்டினம் வட்டம் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இளங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஆனந்த் மற்றும் மருத்துவ அலுவலர் ஆனந்த பிரபு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் மலேரியா மாதம் விழிப்புணர்வு பேனரை பள்ளி மாணவ மாணவிகள் காலனி தெரு, கடைத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, வழியாக பெருங்கடம்பனூர் துணை சுகாதார நிலையத்தை சென்றடைந்தது முன்னதாக அனைவரும் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் இதில் வீடு பொது இடங்கள் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும் பயன்படாத பிளாஸ்டிக் குவளைகள், பாட்டில்கள் தேங்காய் ஓடுகள், டயர்கள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சுபதீஸ்வரன், தேவகுமார்,ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சி.செந்தில் குமார் செய்திருந்தார்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment