இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி


 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக நள்ளிரவு நேரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரபேஸ்வரர் கோவிலுக்கு சென்று தியானம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜி திடீரென பூஜை, தியானம் செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் செயலாளர் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment