அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது..... இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது..... இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு

 


அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது.

முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அவர் ஒரு நல்ல தலைவர். மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தை எதிர்கொண்டோம்.ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய தனது நாடு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈரான் நாட்டின் ஆட்சியாளரும் மதத் தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment