நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு விழா - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு விழா

 


சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்று நீட் தேர்வினை எழுதினார்கள் இதில் ஸ்ரீ சைதன்யா பள்ளி குழும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் தமிழக அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் முதல் 10 இடங்களில் ஐந்து பேர் இடம் பிடித்து உள்ளனர் இதனை தொடர்ந்து இந்திய அளவில் முதல் 100 இடங்களில் ஏராளமான மாணவ மாணவியர்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஆலந்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் ஸ்ரீ சைதன்யா பள்ளி குழுமத்தின் இயக்குனர் சுஷ்மா போப்பனா ஸ்ரீ சைதன்யா பள்ளி குழுமத்தின் தமிழ்நாடு சேர்ந்த பள்ளி குழுமத்தின் நிர்வாக தலைவர் ஹரி பாபு ஆகியோர் இணைந்து மாணவ மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு கேடயங்கள் உள்ளிட்டவை வழங்கினார்கள் மேலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த மாணவ மாணவியர்கள் கூறும்பொழுது இந்த வருடம் கேள்வித்தாள் கடினமாக இருந்தது என்றும் ஆனால் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளியில் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தது அனைத்தும் வைத்து நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்றும் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே எப்படி செல்ல வேண்டும் எந்த முறையில் செல்ல வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரைகளை தெளிவாக வழங்கினார்கள் என்று மாணவ மாணவியர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் படிக்கும் பொழுதும் தேர்வில் சோர்வும் அடையும்போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கள் வழங்குவதாகவும் தெரிவித்தனர் மேலும் சைதன்யா பள்ளியில் குழுமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளார்கள் என்றும் அதில் 250க்கும் மேற்பட்டோர் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வு மூலம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கிவிஷ் 1வது இடத்தையும் திவ்யா 5 வது இடத்தையும் முகமது சமீர் 6வது இடத்தையும், பானோத்து தீரா 8வது இடத்தையும் மங்காரி வருண் 10 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.

 இது மட்டுமல்லாமல் ஸ்ரீ சைதன்யாவில் முதல் 100 தர வரிசைகளில்  19 இடங்களையும் 1000 தரவரிசைகளில் 98 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது .

இதைத் தொடர்ந்து ஸ்ரீ சைதன்யா  அகில இந்திய  தரவரிசையில் -50வது இடத்தையும், தமிழ்நாடு மாநில தரவரிசையில் 2 வது இடத்தையும் அபிநீத் நாகராஜ் பெற்று சாதனை படைத்தார். 

இது மட்டுமல்லாமல்  இந்திய தரவரிசையில் 63வது மற்றும் தமிழ் நாட்டில் 4வது இடத்தை ஹிர்த்திக் விஜயராஜா என்ற மாணவர் பெற்று சாதனை படைத்தார்.

No comments:

Post a Comment