• Breaking News

    மயிலாடுதுறை: டிராக்டர் வாங்கியபோது ஆர்டிஓ அலுவலர் போல போலி கையெழுத்திட்டு மோசடி..... கலெக்டரிடம் விவசாயி புகார்


    மயிலாடுதுறை வட்டார அலுவ போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கையொப்பத்தை, பயிற்சி பள்ளி உரிமையாளர் போட்டு மோசடி செய்ததாக கலெக்டர் அலுவல கத்தில், விவசாயி மனு அளித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத் தில், மதன்மோகன் என்ற விவசாயி மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

    கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், மயிலாடுதுறை சீர்காழி மெயின் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் உழவு டிராக்டரை வங்கி கடன் உதவியில் விலைக்கு வாங்கினேன். இந்த வாகனமானது கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர பதிவு செய்யப் பட்டு, பதிவு எண் வழங்கப்பட்டது. இந்த வாகன பதிவில் பதிவிற்கான ஆவணங்களில் வாகன உரிமையாளரின் கையொப்பம் போலியாக இட்டு முன்னுக்கு பின்னான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எனது கையொப்பத்தை போலியாக இட்டது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவன உரிமையாளர்,மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கையெழுத்தை, பயிற்சி பள்ளி உரிமையாளர் மோசடியாக போட்டுள்ளார்.எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளார்.

    No comments