சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, June 6, 2025

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 


சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன்  ஆணைக்கிணங்க, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆலோசனைப்படி,15 வது மண்டல குழு தலைவர் அண்ணன் V.E.மதியழகன் அறிவுறுத்தல்படி,3.6.2025 இன்று  காலை 11.30 மணியளவில்  முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி  பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக 194வது (அ ) வட்டம்  ஈஞ்சம்பாக்கத்தில் வட்ட செயலாளர் மாஸ்டர் S.கர்ணா ஏற்பாட்டில் 50 பேருக்கு கண் கண்ணாடிகளும்,500 பேருக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் அவர்கள்,15 வது மண்டல குழு தலைவர் V.E மதியழகன் அவர்கள், கவுன்சிலர் விமலாகர்ணா, மாவட்ட பிரதிநிதி D. தாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.வீ தியாகராஜன், தி.மு.கழக முன்னோடிகள்,மகளிர் அணி,வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment