புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமறைவு - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமறைவு

 


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த எதிர்ப்பை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவாகரத்தில் திருவள்ளூர் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெகன்மூர்த்தி, பெண்ணின் தந்தை உள்ளிட்டவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்கு காவல் துறையினர் நேற்று சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. ஆதரவாளர்களின் கூட்டத்தை பயன்படுத்தி அவர் தப்பியதாக தகவல்கள் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது தலைமுறையாகியுள்ள ஜெகன் மூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment