• Breaking News

    தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது


    தென்காசியில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 570 மனுக்கள் பெறப்பட்டன.

    தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 570 மனுக்கள் பெறப்பட்டது.

    தொடர்ந்து; துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினிடம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகளை தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    No comments