மீஞ்சூர் வடக்கு,தெற்கு ஒன்றியங்களில் திமுக பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், அமுதரசன் முன்னிலையில் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு, தெற்கு, ஆகிய ஒன்றியங்களில் திமுக பாக முகவர்களின் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீசன் ஏற்பாட்டிலும் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் முரளிதரன் ஏற்பாட்டில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் பொன்னேரி தொகுதி பார்வையாளர் அமுதரன் ஆகியோர் கலந்துக்கொண்டு பாக முகவர்கள் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், சிறுபான்மை நலன் பிரிவு அமைப்பாளர் முகமது அலவி, மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments