சிறுவாபுரி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில் 1 ஜோடிக்கு 4 கிராம் தங்கம் உட்பட 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயில் அமைந்துள்ளது இங்கு தொடர்ச்சியாக 6வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அதிலும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 4 தங்கம் உட்பட 70,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் பேரில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் இன்று 1 ஜோடிக்கு 4 கிராம் தங்கம், கட்டில் மெத்தை, பீரோ உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்பிலான கல்யாண சீர்வரிசை பொருட்களுடன் இலவசம் திருமணம் கோவில் நிர்வாகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோயில் செயல் அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுடன் அரசு வழங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம், திருக்கோவிலின் செயல் அலுவலர் மாதவன், சுப்பிரமணி திருக்கோவிலின் அர்ச்சகர்கள் ஒன்றிய பொறுப்பாளர் ராஜா ஆனந்தகுமார் சிறுவாபுரி ரமேஷ் ஆரணி வெங்கடேசன் விக்ரம் மனோஜ் மணிமாறன் ரோஸ் நடராஜ் பொதுமக்கள் மணமகன் மணமக்கள் வீட்டில் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
No comments