• Breaking News

    மக்களவையில் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’..... மதியம் 12 மணிக்கு ராஜ்நாத் சிங் விளக்கம்.....

     


    பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மிக முக்கிய ராணுவ நடவடிக்கையாக நடந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. இந்த நடவடிக்கையைக் குறித்து இன்று மக்களவையில் 16 மணி நேரம் நீடிக்கும் வகையில் விவாதம் தொடங்கஉள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு இந்த விவகாரத்திற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனிப்பட்ட விளக்கத்தை மக்களவையில் வழங்க உள்ளார்.

    நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டு அமைதி, உளவுத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான விவாதமாக இது உருவெடுக்க உள்ளது. பாதுகாப்புப் படைகள் நடத்திய வெற்றிகரமான இந்த நடவடிக்கையின் பின்னணி, அதன் தாக்கங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    No comments