• Breaking News

    சென்னை: விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்

     


    இண்டிகோ விமானம் ஒன்று இன்று சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஐஐடி மாணவர் ஒருவர் திடீரென விமானத்தின்  அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார்.

    இதையடுத்து அந்த இளைஞரின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு கீழே இறக்கி விடப்பட்டார். அவரிடம் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    No comments