• Breaking News

    குமரன்நாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் திருக்கோவில் 20ஆம் ஆண்டு தீமிதி திருவிழா...... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள்......


     கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள குமரன்நாயக்கன் பேட்டை அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலின் 20ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 11ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா  கோயில் அறங்காவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ண லீலா தெருக்கூத்து நடைபெற்றது.

    கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் 1200 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர்.

    இந்த விழாவில் பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன், ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ் சிவகுமார், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீதர், பூவலம்பேடு லோகாம்பாள் கருணாகரன் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

    தொடர்ந்து வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வரும் பக்தருக்கு அனைவருக்கும் திருமண மண்டபத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    No comments