• Breaking News

    குற்றாலம் சாரல் திருவிழாவில் 2ம் நாள் நிகழ்ச்சி..... மாவட்ட ஆட்சியர் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.....


    தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவின் 2- வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை அவர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது நாள் துவக்க விழா நிகழ்ச்சியாக விளையாட்டுத்துறையின் சார்பில் யோகாசன போட்டிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புளியங்குடி செல்வன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கடையநல்லூர் சாதனா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இடைகால் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புல்லுக்காட்டு வலசை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாவூர்சத்திரம் இந்து தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சியும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறையின் சார்பில் யோகா நடனமும், கலை பண்பாட்டுத்துறை ஃ தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் தென்காசி கலைவளர்மணி சு.புருஷோத்தமன் சித்திரசபை நாட்டியாஞ்சலி வழங்கும் நாட்டிய நாடகமும், தோவாளை திரு.முத்துக்குமார் குழுவினரின் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியும், சுறறுலாத்துறையின் சார்பில் திருச்சி ஸ்ரீ சாய் மித்ரன் கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், கன்னியாகுமரி முனைவர் சந்தியாதேவி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சன்டிவி “அசத்தப் போவது யாரு?” புகழ் இரட்டையர்கள் அசோக் மற்றும் ஆனந்த் வழங்கும் அசத்தல் மதுரை அசோக் சகோதரர்களின் ஜக்ளிங் நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் வீரமணி கலந்து கொண்ட நெல்லை காஜா வழங்கிய “ஸப்தஸ்வரங்களின் சுகராகம்” திரைப்பட மெல்லிசையும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட விளையாட்டு அலுவலர்.ராஜேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    No comments