• Breaking News

    திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..... தாய் உட்பட 3 குழந்தைகள் படுகாயம்.....

     


    பாலக்காட்டில் கார் தீ பிடித்து எரிந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் படுகாயம் அடைந்தனர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் போல்புள்ளி கைப்பக்கோடு பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

    செவிலியராக பணியாற்றும் எல்சி மார்ட்டின், தனது குழந்தைகள் எமிலியானா மரியா மார்ட்டின், ஆல்ஃபிரட் பார்பின் மற்றும் இன்னொரு சிறுமி உடன் காரில் பயணிக்க முயன்ற போது, பழைய மாருதி 800 காரை ஸ்டார்ட் செய்யும் முயற்சியின் போது வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பால் காரின் பின்பகுதி முழுவதும் தீயில் அடியோடு சிக்கியது.

    இந்த விபத்தில் எல்சிக்கும், அவரது இரு குழந்தைகளுக்கும் 90 சதவீதத்துக்கும் அதிக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாவது குழந்தைக்கு சுமார் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மூவரும் தற்போது எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எல்சியின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், இந்த மர்மமான விபத்து அவர்களின் குடும்பத்தை கண்மூடித்தனமாக வேதனைக்குள் தள்ளியுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையும் மோட்டார் வாகனத் துறையும் காவல்துறையும் சேர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. பழைய காரின் வயதான நிலை, நீண்ட காலமாக பயன்பாடின்றி இருந்தது என்பதும் கவனிக்கப்பட்டுள்ளது. காரை ஸ்டார்ட் செய்யும் போது பெட்ரோல் வாசனை வந்ததாகவும், இரண்டாவது முறையில் ஸ்டார்ட் செய்யும்போது கார் வெடித்ததாகவும் குழந்தை ஒருவர் கூறியதாக அருகிலிருந்த வீட்டுக்காரர் தெரிவித்தார்.

    தீயணைப்புப் படையினர் முதற்கட்டமாக காரில் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். முழுமையாக எரிந்ததால் காரின் உள்ளமைப்பை விரிவாக ஆய்வு செய்வது கடினம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    No comments