சமூக வலைதள கணக்குகளை மீட்டு தாருங்கள்..... டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் புகார்.....
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறும் நிலையில் நான் தான் கட்சியின் தலைவர் என அன்புமணி கூறுகிறார்.
அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதியவர்களை ராமதாஸ் நியமிக்கும் நிலையில் இனி அன்புமணி என்னுடைய பெயரை கூட பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில் ராமதாஸ் தற்போது டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அதாவது தன்னுடைய எக்ஸ் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய கணக்குகளின் பாஸ்வேர்டு மாற்றப்பட்டுள்ளதால் அதனை அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து மீட்டு தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதை மீட்டெடுப்பதற்கு தேவையான தகவல்கள் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
No comments