குற்றாலம் சாரல் திருவிழா 3ம் நாள் மாணவர்களுக்கு சிலம்பம், பல்சுவை கலை நிகழ்ச்சி...... சான்றிதழ், பரிசுக ளை ஆட்சியர் வழங்கினார்......
குற்றாலம் சாரல் திருவிழா 3ம் நாள்ல் மாணவர்களின் சிலம்பம், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிழ், பரிசுளை ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவின் 3- வது நாள் திருவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
மூன்றாவது நாள் சாரல் திருவிழா நிகழ்ச்சியாக சுற்றுலாத் துறையின் சார்பில் ஐந்தருவி படகு குழாமில் படகு போட்டியும், விளையாட்டு துறையின் சார்பில் சிலம்பம் போட்டியும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்பொழி புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழப்பாவூர் நாடார் இந்து துவக்கப்பள்ளி, சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளி, நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறையின் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் எல்.ஆர்.எஸ் கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், நெல்லை ஸ்ரீரமா நாட்டியாலயாவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சிவகாசி வேல்முருகன் கலைக்காதலன் குழுவினரின் கரகாட்டம் கிராமிய நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறையின் சார்பில் சங்கரன்கோவில் இளந்தென்றல் கலைக்குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடர் நடனம் நிகழ்ச்சியும், கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ்.லின்ஸி கலந்து கொள்ளும் தேனிசை திலகம் நெல்லை தியாகராஜனின் “மெலோடியஸ் மியூசியானா” திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ).செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி).ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments