• Breaking News

    குற்றாலம் சாரல் திருவிழாவில் 4ம் நாள் நிகழ்ச்சி..... பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.....


    குற்றாலம் சாரல் திருவிழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவின் 4- வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியம் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளும், கடையநல்லூர் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஆய்க்குடி சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கட்டேறிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கேளையாபிள்ளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கானாவூர் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி, தென்காசி காட்டுபாவா நடுநிலைப்பள்ளி, நல்லூர் அரவன்குடியிருப்பு டேவிட் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும்,

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பயிற்சி பெற்ற சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், திருநங்கைகளின் கலைநிகழ்ச்சிகளும், சுற்றுலாத்துறையின் சார்பில் சென்னை நாராயணன் கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், சென்னை மரு.ஆர்.எஸ்.வெங்கட்ராமனின் குரலிசை நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் பழைய பேட்டை தபாலகிருஷ்ணன் குழுவினரின் கணியான் கூத்து நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சங்கரன்கோவில் ஸ்ரீகுரு ஸ்ரீராம் நாட்டியக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறையின் சார்பில் செங்கல்பட்டு விநாயகா நாட்டியக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சுரேஷ் தூத்துக்குடி டெபினோ மெல்லிசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாசுவேநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) வனிதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    No comments