• Breaking News

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் நகராட்சி 24 & 25 வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோபி மொடச்சூர் சாரதா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்"முகாமை கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவரும் , கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளர் என்.ஆர். நாகராஜ்  தலைமையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் டி.வி. சுபாஷினி, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர்  சரவணன், கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கைத்தறித் துறை அலுவலர் சரவணன்  தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் 13 துறைகளை சார்ந்த அதிகாரிகள்,நகர்மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இச்சிறப்பு முகாமில் 800 பேர்களுக்கு அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இம்முகாமில் மனு கொடுத்த பயனாளிகள் 30 பேர்களுக்கு உடனடியாக அவர்கள் மனுவின் மீது முடிவெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முகாமிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட  செயலாளர் என்.நல்லசிவம்  மதிய உணவு வழங்கினார்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி








    No comments