• Breaking News

    கீழப்பாவூரில் ரூ.6.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடையை பேரூராட்சி தலைவர் திறந்து வைத்தார்



    கீழப்பாவூரில் ரூ.6.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடையிடை பேரூராட்சி தலைவர் ராஜன் திறந்து வைத்தார்.

    கீழப்பாவூர் பேரூராட்சி 2வது வார்டு கோட்டையூர் பகுதியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்படட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோடீஸ்வரன்,  இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்விஜெகதீசன், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    No comments