• Breaking News

    கீழையூர் அருகே விழுந்தமாவடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்..... விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்ட பழ மரச் செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் தொகுப்பு......



    கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி கிராமத்தில்  ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக   வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    மக்களின் உடல் நலத்தை காக்க ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த பயறு வகை தானியங்களை மக்கள் உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கில்  தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மூன்று பழ மர செடிகள் அடங்கிய பழ மரச் செடி தொகுப்பு, ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய காய்கறி விதைத்தொகுப்பு மற்றும் மர துவரை , காராமணி பயறு மற்றும் அவரை விதைகள் அடங்கிய பயறு வகை பயிர் விதை தொகுப்பு என மூன்று வகையான தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி  இத்திட்டம் துவக்க நிகழ்வு கீழையூர் வட்டாரம் விழுந்தமாவடி கிராமத்தில் கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் ஏ.தாமஸ் ஆல்வாஎடிசன்  தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  கௌசல்யா இளம்பரிதி  முன்னிலை வகித்தார். 

    இந்நிகழ்ச்சியில் மேற்படி பழ மரச் செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் தொகுப்பு மற்றும் பயறு வகை பயிர் விதைகள் தொகுப்பு ஆகியவை விவசாயிகளுக்கு ஆத்மா தலைவர்  வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை கீழையூர் வட்டார வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து  செய்திருந்தனர்.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன் 

    No comments