திருக்குவளையில் அகவை முதிந்த தமிழறிஞர் நலச் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா நடைபெற்றது
திருக்குவளை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி-க்கு வழங்கப்பட்ட பெண்மை போராளி விருது .திருக்குவளையில் அகவை முதிந்த தமிழறிஞர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற நற்பெரும் விழாவில் சமுதாயத்தின் உயர்வுக்கு பல்வேறு நிலையில் உழைத்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழறிஞர்களுக்கு உதவி தொகை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் ஆட்டம், பாட்டத்துடன் தமிழறிஞர்களின் பேரணியுடன் நாற்பெரும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.தமிழக அரசின் உதவி பெறும் அகவை முதிந்த தமிழறிஞர் நலச் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா, விருது வழங்கும் விழா, உதவி தொகை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தஞ்சாவூர் மண்டல தொடக்க விழா என நாற்பெரும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாட்டரசின் உதவி பெறும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் நலச்சங்கத்தின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான இரா. துரைமுருகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்விற்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மண்டல தலைவர் சொ. குமார், துணைத் தலைவர் ஜெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் தலைவர் ந. சுப்பையா தொடக்க உரையும் பொருளாளர் சொர்ணபாரதி நோக்க உரையும் வழங்கினர்.இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழக அரசின் உதவி பெறும் தமிழறிஞர்கள் பங்கேற்று முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு ஆட்டம், பாட்டத்துடன் பேரணியாக வந்த அவர்கள் அங்கிருந்த மு.கருணாநிதி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகையை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் மற்றும் சமுதாயத்தின் உயர்வுக்கு பல்வேறு நிலைகளில் உழைத்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கோலாட்டம், கும்மியாட்டம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி உள்ளிட்டவை நடைப்பெற்றது.அதனைத் தொடர்ந்து கலைஞரின் பன்முகங்கள் என்ற தலைப்பில் மகளிர் கவியரங்கம் நடைபெற்றது.மண்டல தலைவர் திருக்குவளை முல்லைப் பாண்டியன் வரவேற்றார்.துணைத் தலைவர் த. பழனி நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments