ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்க ஏமாளி அல்ல...... அமித்ஷாவுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்.....
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் அமித்ஷா தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார். இதேபோன்று பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லிவிட்டதாக சொன்ன நிலையில் தான் தமிழக பாஜக தலைவர்களும் அமித்ஷா சொன்னது தான் தங்களின் விருப்பம் என்கிறார்கள்.
ஆனால் அதிமுக கட்சியின் தலைவர்கள் பலரும் இதனை மறுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி கிடையாது கண்டிப்பாக அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது கூட்டணி ஆட்சி கிடையாது என்றார்.
இது பற்றி அவர் கூறியதாவது, நாங்க திமுகவை மாதிரி வாரிசை அரசியலுக்கு கொண்டுவர நினைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும். கூட்டணி வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரள வேண்டும் என்பதற்காகத்தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.
No comments