• Breaking News

    குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது...... அமைச்சர்கள் பங்கேற்பு


    குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்,ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா 20ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார்.  அரசு கூடுதல் செயலாளர் மணிவாசன், சுற்றுலா இயக்குனர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகிக்கின்றனர். வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் வரவேற்கிறார்..

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்றே;று சிறப்புரையாற்றுகின்றனர். தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைகுமார்,மனோஜ்பாண்டியன், கிருஷ்ணமுரளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வாழ்த்தி பேசுகின்றனர்.

    முதல் நாள் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகிறது. 2ம் நாளாள 21ந்தேதி யோகாசன போட்டி, நாட்டிய நாடகம், வில்லிசை, தோல் பாவை கூத்து, 3ம் நாளான 22ந்தேதி படகு போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சி,கொடைக்கானல் பூம் பாறை பழங்குடியின ., மக்களின் தோடர் நடனம் நிகழ்ச்சி, கர்நாடக , மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற் றும் திரைப்பட மெல் லிசை நடக்கிறது. 23ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், கவிதை மற்றும் பாட்டு போட்டி, திரு நங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கணி யான் கூத்து, பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக தி மாநில கலைஞர்களின் ள், கலை நிகழ்ச்சி மற்றும்; மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    24ம் தேதி கோலப் போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லர் கம் பம், பரதநாட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் நாட்டுபுற நிகழ்ச்சியும், 25ம் தேதி அடுப்பில் லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவு போட்டி, நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரா, தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற் றும் திரை இசை தெம் மாங்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    26ம் தேதி பளு மற்றும் வலு தூக்கும் போட்டி, ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச் சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டு மேளம்), மெல்லிசை நிகழ்ச்சியும், நிறைவு நாளான 27ம் தேதி நாய்கள் கண்காட்சி, நாட்டிய நாடகம் நிகழ்ச்சி, கிரா மிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மாடாட்டம் மற்றும் மயிலாட்டம், மகாராஷ்டிரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    மேலும் 20ந்தேதி முதல் 23ந்தேதி வரை ஐந்தருவி பூங்கா வில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறைகளின் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    No comments