கிருஷ்ணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்துள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக,அனுக்ஞை விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம்-கோமாதா பூஜை பூரணாஹுதி,அதனைத் தொடர்ந்துயாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு கும்ப கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சமாக கோமாதா பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணம்பட்டி கம்மவர் சங்க தலைவர் சேதுராம்,செயலாளர் சுருளிராஜ்,பொருளாளர் ரெங்கசாமி உட்பட கம்மவர் சங்க நிர்வாகஸ்தர்கள்,சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர். கோவை,திருப்பூர்,சென்னை கம்மவர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.விழாவில் கோம்பை,தேவாரம் உத்தமபாளையம்,சங்கராபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments