• Breaking News

    காமராஜர் பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு தொலைக்காட்சி பெட்டி காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது


    காமராஜர் பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு தொலைக்காட்சி பெட்டி காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.

    கீழப்பாவூரில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் அங்கன்வாடி மையத்திற்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட துணைத்தலைவர் செல்வன் தலைமை வகித்து, அங்கன்வாடி பணியாளர்களிடம் தொலைக்காட்சி பெட்டியை வழங்கி பேசினார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்து. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் கோடீஸ்வரன், மதியழகன், ஆறுமுகச்சாமி, கதிர்வேல், பாக்கியராஜ், சுரேஷ் முருகன், செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர், முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

    No comments