நாகை அருகே கால்நடைபராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேல்வாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், கன்றுகள,ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல், தீவன அபிவிருத்தி, தாது உப்பு கலவை அளித்தல், பண்ணை ஆலோசனை வழங்கப்பட்டது .
மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், கருவூட்டல், சினைப்பரிசோதனை, ஆய்வக பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடாந்து சிறப்பாக கிடேரி கன்று கால்நடைகளை பராமரிக்கும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் மற்றும் 20 பயனாளிகளுக்கு தீவன விதைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருக்குவளை கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஏ.பிரபு தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில், கால்நடை மருத்துவத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் பாலக்குறிச்சி கு.சிவசங்கர், வேளாங்கண்ணி மு. சுரேஷ்குமார், விழுந்தமாவடி ந. பிரசாந்த், கால்நடை ஆய்வாளர் எஸ்.அன்பிற்கரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஏ.விமலா, உதவியாளர் கே.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments