இலத்தூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்..... தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.....
தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமினை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் காங்கிரஸ் பொன் பாண்டியன் அறக்கட்டளை, பாண்டியராணி அறக்கட்டளை, தென்காசி ப்ரோ விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம நடைபெற்றது.
இம்முகாமினை தென்காசி பழனிநாடார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ப்ரோவிஷன் தலைமை கண் மருத்துவர் ராஜகுமாரி, கண் மருத்துவர் விஜய் மற்றும் குழுவினர் பங்கேற்று கண் பரிசோதனை மேற்கொண்டனர்.220 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ; காங்கிரஸ் நிர்வாகி சட்டநாதன், கதிரவன், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும்“ என் உடல் நலமும் எனது நல்வாழ்வும் என்ற உணவு குறித்த கையேடு வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஞான ரூபன், தர்ஷினி செல்வராஜ், ப்ரோ விஷன் கண் மருத்துவமனை இயக்குனர் நவீன், தலைமை கண் மருத்துவர் ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments