• Breaking News

    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் சென்னை மேயர்

     


    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (11.07.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை மேயர் வழங்கினார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடும்ப நல கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம். ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் ரமோனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments