வேடசந்தூர் கடைவீதியில் திருட வந்த இடத்தில் மதுபோதையில் அசந்து தூங்கிய திருடன்
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் கடைவீதியில் பஷீர் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் வடமாநில நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து வட மாநில நபரிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் செம போதையில் இருந்ததால் பதில் எதுவும் சொல்லவில்லை. இதனை அடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை எடுத்து அப்பகுதி மக்கள் கூறுகையில் திருடவந்த இடத்தில் நல்ல போதையில் தூங்கி விட்டான் என்று தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments