சிறப்பாக விளங்கும் கோவில் யானைகள்..... ஸ்ரீரங்கம் கோவில் யானை 2ம் இடம்...... திருவானைக்காவல் கோவில் யானை 3-ம் இடம்..... முதலிடம் யார் தெரியுமா.? - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

சிறப்பாக விளங்கும் கோவில் யானைகள்..... ஸ்ரீரங்கம் கோவில் யானை 2ம் இடம்...... திருவானைக்காவல் கோவில் யானை 3-ம் இடம்..... முதலிடம் யார் தெரியுமா.?

 


புதுடெல்லியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான லோக்தந்ரா அவுர் ஜந்ரா என்ற அமைப்பு சார்பில் கடந்த ஒரு ஆண்டாக தமிழக கோவில்களில் உள்ள 30 யானைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவில்களில் யானைகளை பராமரித்தல், யானைகளுக்கு வழங்கப்படும் உணவு, யானை பாகன்கள் யானைகளை பராமரிக்கும் முறை, பொதுமக்களோடு கோவில் யானைகள் பழகும் முறை போன்ற செயல்பாடுகளில் சிறப்பாக விளங்கும் கோவில் யானைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வின் முடிவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் உள்ள செங்கமலம் யானை முதலிடம் பிடித்தது. உலக யானைகள் தினத்தையொட்டி நேற்று அந்த கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுடெல்லியை சேர்ந்த லோக்தந்ரா அவுர் ஜந்ரா என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் சுதன்பாலன், ஒருங்கிணைப்பாளர் அஜித் ராஜா ஆகியோர் செங்கமலம் யானைக்கு ‘மன்னையின் இளவரசி’ என்ற பட்டத்தை வழங்கினர்.


யானையை சிறப்பாக பராமரித்த யானை பாகன் ராஜாவுக்கு சிறந்த யானை பராமரிப்பாளர் விருது வழங்கப்பட்டது. 2-வது இடத்தை திருச்சி மாவட்டம் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாளும், 3-வது இடத்தை திருச்சி திருவானைக்காவல் ெஜம்புகேஸ்வரர் கோவில் யானை அகிலாவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment