மதுரையில் நடைபெறும் த.வெ.க. 2வது மாநில மாநாட்டிற்கு 300 வாகனங்கள் பயணம் மேற்கொள்வதென ஆலங்குளத்தில் நடைபெற்ற த.வெ.க மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி.விபின் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாதன், நண்பன் ராஜா, டேனியல் கனகராஜ், ஐயப்பன், பவுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் இசக்கிராஜ் வரவேற்றனர்.
இதில் பேரூர் நிர்வாகிகள், மகேஸ்வரன், ஜெயசந்திரன், கண்ணன். ஒன்றிய நிர்வாகிகள் லெட்சி, ஜோஸ், ஜோசப்செல்வகுமார், அந்தோணி, சந்தோஷ், சத்தியராஜ். மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, நித்யா, ஆனந்தி, ரமேஷ்,நியாஸ்,சந்தனகுமார், வேந்தன், ஆனந்த், மனோஜ்,விஜய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரையில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 300 வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment