• Breaking News

    மேலப்பாவூர் அரசு பள்ளியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிட பணியை யூனியன் சேர்மன் அடிக்கல் நாட்டினார்


    மேலப்பாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிட பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை அடிக்கல் நாட்டினார்.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை மூலம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சொள்ளமுத்து மருதையா தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் கனகஜோதி தங்கராஜ் முன்ன்pலை வகித்தனர். தலைமை ஆசிரியை பூரணி வரவேற்றார்.

    கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், ஒன்றிய துணை செயலாளர் டால்டன், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், மருதையா மற்றும் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    No comments